2025 மே 21, புதன்கிழமை

வன்னேரிக்குளம் கிராமத்தில் யானை தொல்லை

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில் யானைகளின் தொல்லை தொடர்கின்றது.

ஜூலை மாதம் தொடக்கம் நிலவுகின்ற வரட்சி காரணமாக, காட்டில் இருந்து யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து தென்னை, வாழை போன்ற பயன்தரு மரங்களை அழித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு (14) வன்னேரிக்குளம் அணைக்கட்டு வழியாக உட்புகுந்த யானைகள் பிள்ளையார் கோவிலின் பின்பக்க மதிலை தள்ளி விழுத்தியதுடன் ஒரு தென்னம்பிள்ளையினை முற்றாக முறித்து உணவாக உட்கொண்டுள்ளன.

யானைகளால் அழிக்கப்பட்ட ஆலயத்தின் மதில் சேதங்களை வன்னேரிக்குளம் கிராம அலுவலர் ப.சபாரட்ணம், வன்னேரிக்குளம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.நடேசலிங்கம், ஆசிரியர் ஐ.சண்முகராஜா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர் பார்வையிட்டனர்.

கிராம அலுவலரினால் யானைகள் ஊர்மனைக்குள் உள் நுளைகின்ற பகுதிகளில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு யானை வெடிகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னேரிக்குளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X