Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
மன்னார் - மடு வலயப் பாடசாலைகளில், 6,200 மாணவர்கள் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், அதிக வெப்பம் காரணமாக, மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் அவதானம் செலுத்த முடியாது உள்ளதாக, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்ரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மன்னார் - மடு வலயத்தில் உள்ள 52 பாடசாலைகளில், 20 பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. தேவம்பிட்டி, மூன்றாம்பிட்டி, பாலம்பிட்டி, தட்சணாமருதமடு, கட்டை அடம்பன் ஆகிய பாடசாலைகள் இதில் அடங்குகின்றன.
“பிரதேச சபைகள், பாடசாலைகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டுள்ளன. குடிநீர் விநியோகம் இடம்பெறாத பாடசாலைகளில், குடிநீரை மாணவர்கள் வீட்டில் இருந்தே கொண்டு வருமாறு பாடசாலை அதிபர்கள் அறிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago