Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா அரசாங்க விதை உற்பத்தி பண்ணையில், இவ்வருடம் முதல் ஆறு மாதத்திலும், கடும் வரட்சிக்கு மத்தியிலும் இரட்டிப்பு வருமானப் பெருக்கம் காணப்படுவதாக, விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாணப் பணிப்பாளர் ஏ. சகிலாபானு தெரிவித்தார்.
வவுனியாவில், அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், விவசாய பண்ணையில், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், வருமானமானது செலவிலும் குறைவாக அல்லது செலவுக்கு சமானமாகவே காணப்பட்டதாகவும் இதற்கு பல காரணங்கள் உள்ளதனவெனவும் கூறினார்.
எனினும், இவ்விருடம் முதல் ஆறு மாதங்களிலும் கடும் வரட்சியான வானிலை காணப்பட்ட போதிலும், வருமானப் பெருக்கம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவற்றில் நெல் அறுவடையின் மூலம் அதிகளவான வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போது இப்பண்ணையில் ஊழல் இடம்பெற்று வருவதாக, ஊடகங்களில் செய்தி வௌிவரும் நிலையிலேயே, இந்த வருமானப் பெருக்கம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago