Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குத் தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இன்று (23) நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் கரைச்சிப் பிரதேச சபைக்குத் தெரிவாகிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்;களை வரவேற்கும் நிகழ்வு இன்று (23) காலை கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தேர்தலில் போட்டியிட்டு தெரிவான அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சபைக்குத் தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 11 பேரும் இன்று (23-04-2018) நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.
தொடர்ந்து பகல் நடைபெற்ற கன்னியமர்வில் மாத்திரம் கலந்து கொண்டனர்.
இதே வேளை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏனைய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்விலும் அமர்விலும் கலந்து கொண்டனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago