2025 மே 17, சனிக்கிழமை

வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் உற்சவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவலியலாளர் ஒருவருக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம், நேற்று (08) நடைபெற்றது. இதில் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ உயர் அதிகாரிகள், பௌத்த மத துறவிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டார்.

அவர் கோவில் வளாகத்துக்குள் உள்நுழையும் போது, கோவில் நியதிக்கமைய, மேலாடைகளைக் கழற்றிவிட்டு சென்றார்.

கோவில் வளாகத்தில், இராணுவத் தளபதி வழிபாடுகளில் ஈடுபடுவதை ஊடகவியலாளர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன்போது இராணுவத்தினர் ஊடகவியலாளரை ஒளிப்பதிவு செய்ய வேண்டாமெனத் தெரிவித்து, கமெராவை கையால் மறைத்து, கமெராவைத் தட்டிவிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஊடகவியலாளரை கோவிலுக்கு வெளியில் அழைத்து, அவர் எடுத்த வீடியோவை இராணுவத்தினர் கேட்டுள்ளனர். இருப்பினும், அதை அளிக்க ஊடகவியலாளர் மறுத்த நிலையில், இந்த வீடியோக்கள் வெளியே வர கூடாதென, இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், மக்களுக்கு உலருணவு வழங்கியமை மர நடுகை என்பவற்றுக்கு வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கோவில் வழிபாடுகளில் ஈடுபடுவதை ஏன் வெளியிட கூடாது என்பதும் இதனால் தென்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பை சேகரிக்க நேரிடும் என்பதுமே, இதற்கான காரணமா என, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .