Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சிறுவர் தினத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகர பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதான சைக்கிள் பேரணியொன்று, இன்று (01) காலை 7 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, கந்தசாமி கோவில் வீதி வழியாக இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையை அடைந்து, அங்கிருந்து இலங்கை திருச்சபை வித்தியாலம், முஸ்லிம் மகா வித்தியாலம், சைவபிரகாசா மகளிர் பாடசாலை ஆகியவற்றுக்குச் சென்று, அப்பாடசாலைகளின் மாணவர்களையும் இணைத்துகொண்டு, வவுனியா மாவட்டச் செயலகம் வரை சென்றது.
இந்தப் பேரணியை, மாவட்ட மேலதிகச் செயலாளர் தி.திரேஸ்குமார் ஆரம்பித்து வைத்திருந்தார். சிறுவர் தினத்துக்கான ஆசியுரையை மாவட்டச் செயலாளர் எம். ஹனீபா நிகழ்தினார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலர் ந,கமலதாஸ், ஒமேக நிறுவனத்தின் பிரதிநிதி சமன் ஜெயசிங்க, சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஜெயகெனடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago