Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் நேற்றையதினம் அதிகாலை 3 மணிக்கு தீடீர் என தீபிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக, வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதுடன், அவரூடாக நகர சபையின் தீயணைப்பு வாகனத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த நகரசபை தீயணைப்பு வாகனத்தின் செயற்பாட்டால், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், பாரிய சேதமும் தடுக்கப்பட்டது.
இதன்போது, பெறுமதியான மரப் பலகைகள் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago