Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு, மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.
வன்னி மாவட்ட அமைப்பாளரும் வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினருமான உப்பாலி சமரசங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மத்தியில் சிறந்த சக்தியை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், இலங்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ. சந்திரசேகரன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான முஜிபுர் ரகுமான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
6 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
5 hours ago