2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அகரன்

வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று வவுனியாவில்  ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 11 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு  நீதி கோரி ஆரம்பமான இப்பேரணி, பசார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் சுகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .