Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் தூளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றுக்காலை பூந்தோட்டம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விஷேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் தூள் தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் இளைஞரைப் படையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 3 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 32 வயதுடைய மகாரம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
16 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
35 minute ago