2025 மே 19, திங்கட்கிழமை

வவுனியா எல்லைப் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - அநுராதபுரம் எல்லையோரத்தில், ஹொரவப்பொத்தான வீதி - கலாபுளியங்குளம் பகுதியில் இருந்து, இன்று (31) யானையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடி படையினரின் முகாமுக்கு அண்மித்த வீதியோரத்தில், யானையொன்றின்  சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது தொடர்பில் கலாபுளியங்குளம் விசேட அதிரடி படையினருக்குத் தகவல் வழங்கினர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த விசேட அதிரடி படையினர், அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் யானையிடன் சடலத்தை மீட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X