Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, 622 குடும்பங்களைச் சேர்ந்த 2,166 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மருதோடை, ஊஞ்சல் கட்டி, வெடிவைத்தகல்லு, நைனாமடு, கற்குளம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓமந்தை, காத்தார்சின்னக்குளம், மகாரம்பைக்குளம், கள்ளிக்குளம், பம்பைமடு, காத்தான்கோட்டம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 154 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதேவெளை, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாவற்குளம், பெரியபுளியவ்குளம், கங்கன்குளம், நேரியகுளம், சின்ன சிப்பிகுளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,194 பேரும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அவர் தெவித்தார்.
இவர்களுக்கான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு, அப்பகுதி பிரதேச செயலகம், பிரதேச சபை ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago