2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாகன விபத்தில் முதியவர் படுகாயம்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – கண்டி வீதியில், இன்று (28) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, ​எதிரே வந்த சைக்கிளுடன் மோதுண்டு, வீதியருகே இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, சைக்கிளைச் செலுத்திச் சென்ற மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது - 59) என்ற வயோதிபர் படுகாயமடைந்தார்.

அத்துடன், விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்து, வாகனத்தின் மீது சரிந்து  விழுந்தது.

எனினும், வாகனத்தின் சாரதி அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் பிழைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .