2025 மே 21, புதன்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

சைன் பாம் நிறுவனத்தினரின் முல்லைத்தீவு மாவட்ட  இணைப்பாளர் அ.தேவகுமாரின் ஏற்பாட்டில், முல்லைத்தீவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும் விளையாட்டு வீரார்களுக்கும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வள்ளிபுனம்  பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சைன் பாம் நிறுவனத்தில் சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சைன்பாம் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.இந்திரதாஸ், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசளார் க.ஜெனமேஜயந், கிராம சேவையாளர் கே.லக்கிதன், புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை வைத்தியர் தயாபரன், அகிலஇலங்கை சமாதான நீதவான் திரு.மாதவராசா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜீவதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த  போரால் பாதிக்கப்பட்ட வறுமைகோட்டின்கீழ் உள்ள  40 குடும்பங்களுக்கு தலா 20 கோழிக்குஞ்சுகளும் பாடசாலை மாணவர்கள் 90 பேருக்கு கற்றல் உபகரணங்களும் 08 விளையாட்டு கழகங்களுக்கு வலைபந்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.

வள்ளிபுனம் பகுதியில் உள்ள அறிவொளி முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்கிவிக்கும் நோக்கில் சிறிய கட்டிடம் அமைப்பதற்கான மூப்பதாயிரம் ரூபாய் நிதி உதவியை, சைன் பாம் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.இந்திரதாஸ் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X