Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற விசேட தேவையுடைய மாணவர்களின் வளத்தினை அதிகரிக்குமாறு, பெற்றோர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவை உடைய மாணவர்களுக்கென இப்பாடசாலையில் காணப்படுகின்ற வளங்கள் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்குப் போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பெற்றோர்களினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை குறித்த விசேட தேவையுடைய மாணவர்களின், தேவைகளை நிறைவு செய்வதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் எனவும், பெற்றோர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி வலயத்தில் நூறு வரையான விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்றலில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையிலும் விசேட தேவையுடைய நாற்பது மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
27 minute ago
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
52 minute ago