Freelancer / 2024 ஜூலை 06 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று(06-07-2024) பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் கிளிநொச்சி கோனாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026