2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

இலஞ்சம், ஊழல் தொடர்பான விசாரணைகளை  ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே (CAFFE ) அமைப்பும் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை, இன்று நடத்தின.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வர்த்தக சங்க பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இலஞ்சம், ஊழல் தொடர்பான விசாரணைகளை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்  பிரதிநிதிகள் இணைந்து இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, இலஞ்சம் பெற்றுக்கொள்வோர்களைப் போன்று இலஞ்சம் வழங்குபவர்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்ற விடயம் தொடர்பாகவும்  விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .