Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கோட்டை கட்டிய குளத்தின் கீழ் உள்ள சுமார் 420 ஏக்கர் விவசாய நிலங்களை செழிப்பாக்குவதற்கான வழிகளை அமைத்துத் தருமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்காக, நீர்பாசன வாய்க்கால்கள், விவசாய வீதிகள் மற்றும் கழிவு வாய்க்கால்கள் என்பவற்றை புனரமைத்துத் தருமாறும் அவர்கள் கோருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள கோட்டை கட்டிய குளத்தின் கீழ் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகத்தை மேற்கொள்ளுகின்ற நீர்ப்பாசனக் கால்வாய்கள் நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பெருமளவான நீர் வீண் விரயமாகி வருகின்றது.
எனவே, இக்குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்களைப் புனரமைத்து தருமாறு கோரும் விவசாயிகள், அவ்வாறு நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைக்கப்படும் போது, கூடுதலான நிலப்பரப்பில் சிறுபோக செய்கையை மேற்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago