2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’வீதி இல்லை எனில் அங்கு வறுமை’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஒரு கிராமத்தில் வீதி இல்லை எனில், அது அக்கிராமத்தின் வறுமையை காண்பிக்கிறதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், இன்று (16) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இழந்தவற்றைப் பெறாமல், 70 வருட போராட்டத்தை முன்னெடுத்ததில் அர்த்தம் இல்லையெனவும் உரிமையை மக்களுக்கே பெற்றுக்கொடுக்க போகின்றோமெனவும் இவ்வாறான நிலையிலிருந்து மீள்வதற்காக நாம் நிதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.

உரிமைக்கான அரசியல் போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டிய அதேவேளை, மக்களுக்கான அபிவிருத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டுமெனவும், அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .