2026 மே 07, வியாழக்கிழமை

dd

‘வேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை’

எஸ்.என். நிபோஜன்   / 2018 மார்ச் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடயங்களையும் அங்கு எடுத்துரைப்பார்கள்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சிவநகர் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெனீவாவுக்கு, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றுள்ளனர். வேறு யார், யார் செல்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அங்கு அனைத்து விடயங்களையும் எங்களுடைய பிரதிநிதிகள் எடுத்துரைப்பார்கள்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .