2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வைத்தியர்கள் வருகின்ற நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நோயாளர்களைப் பார்வையிடலாம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

 

வைத்தியர்கள் பார்வையிடுகின்ற நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில், விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் அனுமதிக்கப்படுவதாக, கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.மைதிலி தெரிவித்தார்.

அத்துடன், நோயளர்களைப் பார்வையிடுவது குறித்தான முறைப்பாடுகள் ஏற்கெனவே கிடைக்கப்பெற்று, அவை தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை, மதிய நேரங்களில் அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கு, வைத்தியசாலை நிர்வாகம் தடை விதித்து வருவதாக, அப்பகுதி மக்களால் குற்றஞ்சாட்டபட்டு வருகின்றது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.மைதிலியிடம் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X