Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூன் 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக 47.27 மில்லியன் ரூபாய் நிதி, 34 திட்டங்களுக்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்;பட்டு வருகின்றன. இதனடிப்படையில் இந்த ஆண்டில் 34 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டிலேயே 34 வகையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இதற்காக 47.27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக கூடுதலான செயற்பாடுகள் ஆரம்பிக்க முடியாமல் போனது. தற்போது இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்;பட்டு வருகின்றன.
நெற்செய்கையில் இயந்திரப்பாகங்களை அதிகரிக்கும் வகையில் நெல் நாற்று நடும் இயந்திரங்கள் 4 கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் களைகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்பது களை கட்டுப்படுத்தும் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளது. மறுவயற் பயிர்களை மேற்கொள்ளும் பொருட்டு நிலக்கடவை, பயறு உள்ளிட்ட பயிர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை பழப்பயிர்கள் மற்றும் வாழைச்செய்கை என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago