Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில், படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு, உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் என்பவை, தொடர்ந்து படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை விடுவித்து, தங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு கோரி, அப்பகுதி மக்கள், பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் தங்கியுள்ள தங்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்வதற்கான உதவிகள் எவையும் கிடைக்கவில்லை என்றும் தங்களுடைய நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவற்றை மீட்டுத்தருமாறும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு,கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டபோதும், பின்னர் அது உடனடியாகவே நிறுத்தப்பட்டது என்றும், படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது கால்நடைகள், ஏதோ ஒரு விதத்தில் களவாடப்பட்டு வருவதாகவும், உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago