2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

'தீர்வின்றேல் “ஏ-9 வீதியை முடிக்குவோம்'

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில், அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், புதுவருடத்துக்குப் பின்னர், அரச நிர்வாகங்களையும் ஏ-9 வீதியின் போக்குவரத்துக்களையும் முடக்கி, பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்” என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உரிய பகுதிலை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் எனக்கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், எந்தவிதத் தீர்வுகளுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடந்திருந்தன. இக்கலந்துரையாடலில், “காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த 42 நாட்களுக்கும் மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை எந்தவித பதிலையும் இந்த அரசாங்கம் வழங்கவில்லை என்றும் இவ்வாறான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உடல் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச நிர்வாகங்களை முடக்கியும் ஏ-9 வீதியின் போக்குவரத்தை இடைநிறுத்தியும், பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு சகல பொது அமைப்புக்களும் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தன.

இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 30க்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X