2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் 51,871 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இ.சுகந்தினி

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த வருடத்தில் ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நிலவிய வரட்சி காரணமாக 51,871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வவுனியா மாவட்டத்தில்  30,527 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 655 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா பிரதேச செயலகம்,   வவுனியா வடக்கு பிரதேச செயலகம்,  வவுனியா தெற்கு பிரதேச செயலகம்  மற்றும் வெண்கலச்செட்டிகுளம் பிரதே செயலகம் ஆகியவற்றிலேயே கடும் வரட்சி நிலவியது. 

வவுனியா பிரதேச செயலகத்தில் 22,371 குடும்பங்களும்  வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 2,750 குடும்பங்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் 2,726 குடும்பங்களும்  மற்றும் வெண்கலச்செட்டிகுளம் பிரதே செயலகத்தில் 2,680 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வரட்சி நிவாரணமாக குடிநீர் விநியோகத்துக்காக 06 மில்லியன் ரூபாய் நிதியுதவியும்; குடிநீர்த்தாங்கி வாங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியும்; அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இந்த வருடம் வழங்கியது. அத்துடன், 03 பவுசர்களையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்கியதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 95 நீர்த்தாங்கிகளை கொள்வனவு செய்து மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா பிரதேச செயலகத்துக்கு மாத்திரம் சராசரியாக நாளாந்தம்  55,000 லீற்றர் குடிநீர் விநியோகிப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியால் 21,344 குடும்பங்களைச் சேர்ந்த 73,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 8,491 குடும்பங்களும் கண்டவாளை பிரதேச செயலகப் பிரிவில் 5,757 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 4,706 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் 2,391 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வரட்சி நிவாரணமாக இந்த மாவட்டத்துக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 13 மல்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியதுடன், 03 பவுசர்களையும் வழங்கியது.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் சராசரியாக  16,000  முதல் 20,000 லீற்றர்வரை நாளாந்தம்; குடிநீர் விநியோகிப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .