2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்:10 பவுண் நகைகள் கொள்ளை

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி  கிராமத்தில் வீடொன்றினுள் நேற்று   திங்கட்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் குறித்த வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு சுமார் 10 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக இலுப்பக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பக்கடவை கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தமது பிள்ளைகள் வெளிநாடு சென்ற நிலையில் வயோதிப தம்பதியினர் தனிமையாக வாழ்ந்து வந்தனர்.

நேற்று   திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த வீட்டிற்குள்; 4 பேர் கொண்ட மர்ம நபர் குழு புகுந்து வயோதிப தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கி சுமார் 10 பவுண் நகைகளை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுப்பிரமணியம்(வயது-63) மற்றும் அவரது மனைவி சுப்பிர மணியம் ராஜேஸ்வரி(வயது-56) ஆகிய இருவரும் கடும் காயமடைந்திருந்தனர்.

இவர்கள் அபாயக்குரல் எழுப்பிய போதிலும் அயல் வீட்டாருக்கு கேட்கவில்லை. இந்த நிலையில், தகவல் அறிந்த இலுப்பக்கடவை பொலிஸார் குறித்த வீட்டிற்கு சுமார் 12 மணியளவில்  சென்று குறித்த இருவரையும் மீட்டனர்.

பின்னர் அவ்விருவரும் மேலதிகச் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் மாந்தை நாயாத்து வழி வீதியூடாக படகின் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X