2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 15 பேருக்கு சுயதொழில் உதவி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

மன்னார் மாவட்டத்திலுள்ள 15 பயனாளிகளுக்கு யுனிசெவ் நிறுவனத்தின் சுயதொழில் உதவியான தலா 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தின் மன்னார், அடம்பன் மற்றும் முசலி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தலா 5 பேர் தெரிவு செய்யப்பட்டு இந்த உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை செல்லும் வறிய மாணவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன் இந்த சுயதொழில் நன்கொடைகள் கடந்த திங்கட்கிழமை (17) முதல் வழங்கப்பட்டுள்ளன.

யுனிசெவ் நிறுவனம் மன்னார் மாவட்டத்திலுள்ளவர்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு 122 பேருக்கும், 2013ஆம் ஆண்டில் 117 பேருக்கும் சுயதொழில் உதவிகள் வழங்கியிருந்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .