2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 4 தையல் பயிற்சி நிலையங்கள்

Gavitha   / 2014 நவம்பர் 29 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சு மற்றும் சிலிட்டா நிறுவனமும் இணைந்து மன்னார் நகரில் 4 தையல் பயிற்சி நிலையங்களை வியாழக்கிழமை (27) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளன.

உப்புக்குளம் வடக்கு, உப்புக்குளம் தெற்கு, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய 4 கிராமங்களிலும் குறித்த தையல் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த தையல் பயிற்சி நிலையங்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதீயுதீன் வைபவ ரீதியாத திறந்து வைத்தார்.

இதன்போது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜாகீர் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சி நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்து பயிற்சியை ஆரம்பித்து வைத்தனர்.

ஒரு பயிற்சி நிலையத்தில் 20 தையல் பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்பட்டு 6 மாதகால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி முடிவில் பயிற்சியாளர்களுக்கு சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட புதிய தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கப்படவுள்ளன.

கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சு மற்றும் சிலிட்டா நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வந்த தொழிற் பயிற்சிகள், கொழும்பில் மாத்திரம் இடம்பெற்று வந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால். குறித்த பயிற்சி நிலையங்கள் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .