2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் 40,594 குடும்பங்கள் மீள்குடியமர்வு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 40,594 குடும்பங்களைச் சேர்ந்த 131,116 பேர் மீள்குடியேறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் இணைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சதவீதமானவர்கள் மீள்குடியேறியுள்ளனர்.

வெடிபொருள் அபாயம் காணப்படும் இடங்களிலும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படும் இடங்களிலும் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,363 பேரும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 7,623 குடும்பங்களைச் சேர்ந்த 24,490 பேரும் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 6,912 குடும்பங்களைச் சேர்ந்த 24,355 பேரும் பச்சிலைப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 3,537 குடும்பங்களைச் சேர்ந்த 11,908 பேரும்  மீள்குடியேறியுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் இணைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .