2025 ஜூலை 26, சனிக்கிழமை

முதல்வர் ஸ்டாலினுக்கு தீவிர சிகிச்சை

Freelancer   / 2025 ஜூலை 25 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாள்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்வர் ஜி .செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் நேற்று  செய்யப்பட்டது. நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாள்களில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X