2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 482 நிறுவனங்கள் இயங்குகின்றன

Kogilavani   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 482 வணிக, கைத்தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் இருப்பதாக மாவட்ட செயலகத்திலுள்ள குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார தொகை மதிப்பீட்டு தேவைக்காக நாடெங்கும் மாவட்ட ரீதியில் வணிக நிறுவனங்களின் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.

நாட்டின் வணிக, கைத்தொழில் சேவை துறைகள் எவ்விதம் செயற்திறன் உடையதாக உள்ளது என்பதை அறியும் நோக்குடன் காலத்துக்கு காலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்துக்கு பின்னர் இந்தளவு வணிக நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றமை முன்னேற்றகரமான நடவடிக்கை என புள்ளி விபரத்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .