2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 55 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 55 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் 'மாகாண டெங்கு ஒழிப்பு தினம்' எதிர்வரும்; 29 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 5 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேற்படி 55 பேரில் சிலர்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களென்றும் சிலர் வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தவர்களென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறு டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியவர்கள் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X