2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

துணுக்காயில் 5,884 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் 5 ஆயிரத்து 884 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 419 பேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்கள் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு வந்தனர்.

அதனடிப்படையில், துணுக்காய் கிராம அலுவலர் பிரிவில் 266 குடும்பங்களும், கல்விளானில் 322 குடும்பங்களும், உயிலங்கத்தில் 169 குடும்பங்களும், யோகபுரம் மேற்கில் 194 குடும்பங்களும், மல்லாவியில் 493 குடும்பங்களும், யோகபுரம் மத்தியில் 315 குடும்பங்களும், திருநகரில் 264 குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன.

அத்துடன், புத்துவெட்டுவானில் 120 குடும்பங்களும், அமைதிபுரத்தில் 209 குடும்பங்களும் அம்பலப்பெருமாள்குளத்தில்  153 குடும்பங்களும், ஆலங்;குளத்தில் 296 குடும்பங்களும், தேறாங்கண்டலில் 449 குடும்பங்களும், யோகபுரம் கிழக்கில் 202 குடும்பங்களும், புகழேந்தியில் 247 குடும்பங்களும், பாரதிநகரில் 321 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

மேலும், அனிஞ்சியன்குளத்தில் 1101 குடும்பங்களும், தென்னியங்குளத்தில் 199 குடும்பங்களும், ஐயன்கன்குளத்தில் 361 குடும்பங்களும், கோட்டைகட்;டியகுளத்தில் 203 குடும்பங்களும் என 5,844 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன.

மீளக்குடியேறிய மக்களுக்கு வீட்டுத்திட்ட வசதிகள், இந்திய வீட்டுத்திட்டம், அரச மற்றும் அரச சார்பற்ற வீட்டுத்திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதேச செயலகம் கூறியது. 

மேலும், துணுக்காய் பிரதேச மக்களில் பெரும்பாலானோர்; விவசாயம் மேற்கொள்வோர் என்பதால் விவசாயம் சார்ந்த உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அந்த புள்ளி விபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .