2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியாவில் காற்றுடன் மழை; 173 பேர் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்,ரொமேஷ் மதுசங்க


வவுனியா, வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணாட்டி கிராம அலுவலர் பிரிவில்  காற்றுடன் கூடிய மழையால் 57 குடும்பங்களைச் சேர்ந்த 173 பேர் இடம்பெயர்ந்ததாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியராஜா தெரிவித்தார்.

கண்ணாட்டி கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கல்லுமலை வீதி, ஜே.ஆர்.எஸ் வீதி, தம்பனை வீதி, மருக்காரம்பளை வீதி, கண்ணாட்டி கணேசபுரம் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (29) மாலை கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்தது.

இந்நிலையில், கடும் காற்றினால் வீடுகளின் கூரைத்தகரங்கள்  அள்ளுண்டன. அத்துடன்,  வீடுகளினுள்  மழை நீர் புகுந்ததால் இவர்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை  வழங்கியதுடன்,  சேத விபரங்கள் தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தனர்.

தற்போது காலநிலை சீரடைந்துள்ளதால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .