2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் துஸ்பிரயோகம்; அட்டமஸ்கட விகாராதிபதிக்கு எதிராக மேலும் முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 27 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, அட்டமஸ்கட விகாராதிபதிக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (26) சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளான்.
 
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக இவ்வில்ல சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதிக்கு எதிராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்தது.
 
இதற்கமைய, வவுனியா நீதிமன்றில் விகாராதிபதிக்கு எதிராக தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து நீதிமன்ற உத்திரவின்பேரில் கைது செய்யப்பட்ட விகாராதிபதி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் தன் மீதும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தான் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் நேற்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளான். நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வவுனியா பொலிஸிலும் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவிக்கையில், 'குடும்பநிலை காரணமாக அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் மூன்று வருடங்களாக தங்கி இருந்தேன். நான் விளையாடிக் கொண்டிருந்த போது பழைய ஆணி இருந்த கட்டை ஒன்றினால் எனக்கு விகாராதிபதி அடித்தமையால் காலில் காயம் ஏற்பட்டது. காலுக்கு மருந்து கட்டாமல் பென்டேச் போட்டார்கள். அதன்பின் என் கால், கை எல்லாம் புண் வந்துவிட்டது.

இப்பொழுதும் அது மாறவில்லை. எனக்கு தலையிலும் அடித்து பெரிய காயம் எற்பட்டது. தேங்காய் பால் குடிக்க தந்தார்கள். அதன் பின் அது மாறிவிட்டது. என்னைப் போல என்னுடைய அண்ணாவுக்கும் அடிப்பார்கள். அவருக்கும் காயங்கள் இருக்கு. சிறுவர் இல்லத்தில் இருக்கும் இருண்டு பேர் என்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவார்கள்' எனத் தெரிவித்தான்.

இதேவேளை, அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இருந்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் முல்லைத்தீவு அன்பு சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 8 சிறுவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என சிறுவர் நன்னடத்தை சேவைகள் அலுவலகத்தின் பொறுப்பத்திகாரி தியாகராசா மனோகரராஜா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X