2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுனாமியின் 10ஆவது ஆண்டு நினைவு நாள்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வியாழக்கிழமை; (26) யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயம் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வும், தேசிய அனர்த்த பாதுகாப்பு  தினமும் பல்வேறு இடங்களிலும் நேற்று நடைபெற்றுள்ளது.

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் காலை ஆரம்பமான நிகழ்வில் பொது நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை அணிவிக்கப்;பட்டதை அடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சம நேரத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவுச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதேபோன்று, வத்;திராயன் வடக்கு பகுதியிலும் தாளையடி நினைவாலயத்திலும் வடமராடசி கிழக்;கின் பல்வேறு பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபையின் எதிர்க் கட்;சித் தலைவர் தவராசா யாழ். மாநகர சபை மேயர்; உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னார் கிராம சேவையாளர் தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஆழிப்பேரலை நடந்தேறி பத்து ஆண்;டுகளாகியும் எந்தவிதமான முன்னேற்றங்களும் அடையமுடியவில்லை எனவும் இந்த பாதிக்கப்பட்ட மக்கள் உறவுகளை இழந்த துயர் ஒருபுறம் அவர்களது மீள் வாழ்விற்கான தேவைகள்   புர்த்தி செய்யப்படாமல் ஒரு புறம் என  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தனது உரையில் கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .