2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 11 குளங்கள் வான் பாய்கின்றன

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 குளங்களில் 11 குளங்கள் வான் பாய்வதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

வவுனிக்குளம் 25 அடி 7.5 அங்குலமாகவும், அம்பலப்பெருமாள் குளம் 10 அடி 1.5 அங்குலமாகவும், ஐயன்கன்குளம் 12 அடி 2 அங்குலமாகவும், கல்விளான்குளம் 11 அடி 6.5 அங்குலமாகவும், கொல்லவிளாங்குளம் 11 அடி 0.05 அங்குலமாகவும், கோட்டைகட்;டியகுளம் 9 அடி 7.5 அங்குலமாகவும், மருதங்குளம் 9 அடி 10 அங்குலமாகவும் பழைய முறிகண்டிக்குளம் 9 அடி 8 அங்குலமாகவும், பனங்காமம் குளம் 9 அடி 6.5 அங்குலமாகவும், தென்னியங்குளம் 10 அடி 02 அங்குலமாகவும், தேறாங்கண்டல் 11 அடி 4 அங்குலமாகவும் காணப்படுவதுடன் குறித்த 11 குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன.

அத்துடன், 12 அடி நீர்க்கொள்ளவு கொண்ட மல்லாவி குளத்தில் தற்போது 9 அடி நீர்மட்டம் காணப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .