Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை விற்பனை செய்து வந்த மூவரை மீன்பிடி பரிசோதகர் நீர்மென்டேக்கு தலைமையிலான மீன்பிடி பரிசோதகர்கள் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை திடீர் தேடுதல்களினை மேற்கொண்ட மீன்பிடி பரிசோதகர்கள் 3 கடைகளில் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 42 வலைத்தொகுதிகளை கைப்பற்றியதோடு மூவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின் இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். கைப்பற்றப்பட்ட மேற்படி தங்கூசி வலைகள் 42உம் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவையெனவும் அதனையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் மன்னார் மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் எஸ்.பவாநிதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .