2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான முசலி மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கல்

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ. அம்மார்)


வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மன்னார், முசலி பிரதேச மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த நிவாரணப் பொருட்கள் முசலி பிரதேச செயலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன.

முசலி பிரதேச சபை தலைவர் எஹியாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், முசலி பிரதேச சபை பிரதி தலைவர் மௌலவி பைரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முசலி பிரதேசத்தில் வெள்ளத்தால் 3,500 ஏக்கர் விவசாய நிலம் சேதமுற்றிருப்பதாகவும் 36 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் 1,000க்கு மேற்பட்ட கால் நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் 500 வீடுகள் பாதியளவும் 20 வீடுகள் முற்றாகவும் அழிந்துள்ளதாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கூறினார்.

இதேவேளை, மன்னார் - முசலி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பாலைக்குழி,  கரடிக்குழி மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகளுக்கு கடல் மார்க்கமாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

பறகஹதெனியவிலுள்ள ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் கடற்படையினரின் பாதுகாப்பில் உலருணவுப் பொருட்கள் நேற்று கரைத்தீவு சேராக்குழி கடற்படை சோதனைச்சாவடியிலிருந்து ஆறு படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த மூன்று பிரதேசத்திலும் மீள்குடியேற்றப்பட்ட 550 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X