2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்துடனான மாற்றுக்காணிகள் வழங்கப்படும்: சந்திரகுமார

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக வெள்ளப்பாதிப்புக்களை எதிர் கொண்டு வரும் நிரந்;தர காணிகள் அற்ற  மக்களுக்கு வீட்டுத்திட்டத்துடனான மாற்று காணிகள் விரைவில் வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கபட்டு இடம்பெயந்து முருகானந்தா கல்லூரி, புளியம்பொக்கனை நாகேந்திரா பாடசாலை, கண்டாவளை சீனித்தொழிற்சாலை, பன்னங்கண்டி பாடசாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சுகுனதாஸ், ஈழ மக்கள் ஜனநாயகட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான உலருணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், 'இப்பிரதேச மக்கள் ஒவ்வொரு வருடமும் வெள்ளதினால் பாதிக்கபட்டு வருகின்றனர் இதில் பெருபாலான மக்கள் சொந்த காணிகள் அற்றவர்கள் எனவே அவ்வாறு சொந்த காணிகள் அற்ற மக்களுக்கு மிக விரைவில் வீட்டுத்திட்டத்துடன் காணிகள் வழங்ப்படும் பிரதேச செயலகம் மாவட்டச் செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X