2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணததினாலும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் எமது கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப்பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்ததாகவும் குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'முசலி பிரதேசத்திற்கு 35 படகுகள் மூலம் உலர் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் போது மன்னார் மாவட்டத்தினால் எமக்கு தெரிவிக்கப்பட்ட தொகைகளையும் விட மிகவும் குறைவான உலர் உணவு பொருட்களே எம்மை வந்தடைந்தது.

இதற்கு குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றை திருப்பி அனுப்பி மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அவை தற்போது மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை மாவட்டச் செயலாளரிடம் திருப்பி கையளிக்கப்படவுள்ளன.

அதிகளவான நிவாரணப் பொருட்கள் முசலி பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்களை வழங்குவதில் அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்த ஊழல்கள் குறித்து உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X