2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இராணுவத்தினரின் கற்பிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 07 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் இராணுவத்தினரால் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலையீட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை அடுத்து  இந்த விடயத்தை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்றோம்.

நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் கல்விக் கொள்கை மற்றும் கல்வித் திட்ட நடைமுறைகளுக்கு அமையவும் தேசிய மொழிகள் ஒருங்கிணைப்பு பயில்முறை நடவடிக்கைகளுக்கு அமையவும் எத்தகைய கல்விச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

இத்தகைய நடைமுறையை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்படி, மேற்படி மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்படடிருந்த உடனடி நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்  தெரிவித்தார்.

  Comments - 0

  • K.Balendran Monday, 07 January 2013 03:49 PM

    உப்பிடி ஏதாவது உருப்படியாய் செய்யுங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X