2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

'உள்ளூராட்சி மன்றங்களில் வவுனியா நகரசபைக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படுகின்றது'

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

'இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வவுனியா நகரசபைக்கே அரசு அதிகளவான நிதிகளை இதுவரை ஒதுக்கியுள்ளது என்பது நிதியறிக்கைகளின் பிரகாரம் அவதானிக்க முடிகின்றது' என வவுனியா நகரசபையின் உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் வவுனியா இணைப்பாளருமான அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வவுனியா நகரசபைக்கு அரசு நிதியொதுக்குவதில்லை எனவும் நகர மக்களின் வரிப்பணத்தில் மத்திரமே அபிவிருத்திகள் இடம்பெறுவதாகவும் சிலர் அறிக்கை விடுத்து வருகின்றனர். இது கவலையளிக்கும் விடயமாகும். நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க வவுனியா நகரசபையின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் அரச நிதிகள் பல கோடி ஒதுக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது.

நகரசபையினால் மேற்கொள்ளப்படும் பாரிய வேலைத்திட்டங்கள் அதிகளவில் அரச நிதியொதுக்கீட்டில் நடைபெறுகின்றமையை மறந்து தமது அரசியல் நலனுக்காக மாறான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியா நகர அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் அரசு நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் அவற்றை தடை செய்துவிடக்கூடும்.

எனவே நகரசபையின் ஊடாக இன மத பேதமின்றி அனைவரும் நகர அபிவிருத்திக்காக ஒற்றுமையுடன் செயற்படுவதை சிதைத்து விடகூடாது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X