2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.ஜெனி
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்ணை வெட்டுவான் கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி பாடசாலை கொப்பிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பண்ணை வெட்டுவான கிராமும் வெகுவாக பாதிப்படைந்தது.
இதனால், குறித்த கிராம மக்கள் தமது பிள்ளைகளின் கல்விநிலையை கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாசக்கொப்பிகளை கோரியிருந்தனர்.

இந்நிலையில்  மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் செயலாளரான சால்ஸினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி அப்பியாசக்கொப்பிகள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வர்த்தகரும் மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் செயலாளருமான சால்ஸ், டெலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ, இந்து முதியோர் அமைப்பின் தலைவர் பவமொழி பவன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த கொப்பிகளை மாணவர்களின் பெற்றோரிடம் கையளித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X