2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியாவில் மீண்டும் டெங்கு அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியும் வவுனியா மாவட்ட தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரியுமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வவுனியாவில் கடந்த வருடம் 82 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியதாக தகவல்கள் கிடைத்தன. இவர்களில் 72  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இவ்வருடத்தில் இதுவரையில் 3 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். வவுனியாவில் தோணிக்கல்லை சேர்ந்த 3 வயது குழந்தையொன்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோயால் உயிரிழந்துள்ளது. 

எனவே டெங்கு தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளமையால் பொதுமக்கள் நுளம்புபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நுளம்புகள் பெருகாதவாறு நீர் தேங்கி நிற்கும் இடங்களை முழுமையாக சுத்தப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர் தேங்கி நிற்கும் பொருட்களை நிலத்தில் வெட்டி புதைத்தல் வேண்டும்.  அல்லது உள்ளூராட்சிமன்றங்களின் குப்பை அள்ளும் வாகனங்களில் இடுதல் வேண்டும்.  நீர்த் தாங்கிகளின் மூலமாகவும் நுளம்புப் பெருக்கம் ஏற்படுவதால் அவற்றை 5 நாளுக்கு ஒருமுறை முழுமையாக துப்பரவு செய்ய வேண்டும்.

இதேவேளை, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் தகுதியான வைத்தியரையோ அல்லது வைத்தியசாலையையோ நாட வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X