2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மன்னாரில் மீண்டும் வெள்ளம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மன்னார் சாந்திபுரம், சௌத்பார், எமிழ்நகர், பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம், கோந்தைப்பிட்டி, தாழ்வுப்பாடு, எருக்கலம்பிட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகின்றது.

இதனால் இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களில் சிலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பொதுவிடங்களில் தங்கியுள்ளனர்.

மேலும் தாழ்வுப்பாட்டு கிராமத்திலுள்;ள சிறுவர் பாடசாலையொன்று  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதி;க்கப்பட்ட மக்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் நேற்று புதன்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன்,  வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X