2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

போக்குரவரத்து செய்ய முடியாத நிலையில் மன்னார், பாவிலுப்பட்டான் கிராம வீதி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெனி

மன்னார், பாவிலுப்பட்டான் குடியிருப்புக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதால் இவ்வீதியூடாக போக்குவரத்துச் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக பாவிலுப்பட்டான் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாவிலுப்பட்டான் குடியிருப்புக் கிராமத்திற்கான பிரதான வீதியில் கனரக வாகனங்கள் அதிகளவில் பயணிப்பதால் இவ்வீதி தற்போது கடுமையாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார், பேசாலை வீதி - பாவிலுப்பட்டான் குடியிருப்புக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி தற்போது பாரியளவில் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்ளமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

தற்போது இவ்வீதியூடாக கனரக, டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச் செல்லப்படுகின்றது. இந்நிலையில், இவ்வீதியூடாக நாளொன்றுக்கு 4 டிப்பர் ரக வாகனங்கள் 4 தடவைகளுக்கும் மேலாக பயணிக்கின்றன.

டிரக்டர் வண்டிகள் இவ்வீதியூடாகச் செல்லுவதற்கு நாங்கள் தடையில்லை. ஆனால் கனரக, டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச்செல்வதையே நாங்கள் கண்டிக்கின்றோம். 

இவ்வீதியை திருத்தித்தர இதுவரையில் எவரும் முன் வரவில்லை. இவ்வீதியூடாக மணல் ஏற்றிச் செல்லுவதை தடுத்து நிறுத்துமாறு பாவிலுப்பட்டான் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X