2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மாணவர்க்கு பால் வழங்கும் திட்டத்தில் மோசடி; வவுனியா பாடசாலை அதிபர்களுக்கு எதிராக புகார்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 11 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தெற்கு வலயத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவிடம் ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள மாவட்டச் செயலாளர், இம்முறைப்பாடு தொடர்பில் ஆராயுமாறு பொது கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அது தொடர்பில் தனக்கும் அத்திணைக்களம் அறிவிக்கும் என்றும் மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X