2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் முதல் தடவையாக வடமாகாண ஆங்கில தின போட்டி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண ஆங்கில தின போட்டி முதல் தடவையாக இம்முறை மன்னாரில் இடம்பெறுவதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.

வட மாகாண ஆங்கில தின போட்டி இன்று வியாழக்கிழமை காலை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் ஆரம்பமாகியது. குறித்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களையும் உள்ளடக்கியதாக இடம்பெறும் குறித்த போட்டியில் 400 பாடசாலைகளைச் சேர்ந்த 4 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்போது விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் என்.பரமதாஸ், வடமாகாண கல்வி திணைக்களத்தின் ஆங்கில மொழிக்காண உதவிக் கல்விப் பணிப்பர் சோமஸ் கந்தராஜா, மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், வலய கல்வி பணைமணையினைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X