2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் பழப்பயிர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பழப்பயிர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (14) காலை மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின்போது,  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதுளம் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

முதற்கட்டமாக மன்னார், நானாட்டான், மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்;பட்ட கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கு மாதுளம் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய, மன்னார் பிரதி விரிவாக்கல் விவசாயப் பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X